Kamakshi Amman Virutham - காமாட்சி அம்மன் விருத்தம்

10,848,677
0
Published 2013-06-29
Sree Kamatchi Ambal Virutham
Singers: Sisters, Bala Swami & Uma

மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட் புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்
கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே!

சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிடுவாய்!
சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றிவிடுவாய்!
ஜெகமெலாம் உன் மாயை! புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது
சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்க சிறிய கடன் உன்னதம்மா
சிவசிவ மஹேஸ்வரி பரமனிடை ஈஸ்வரி சிரோன்மணி மனோன்மணியும் நீ!
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகத் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்
முடிந்திட்ட தாலி அழகும்

சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும்
செங்கையில் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம்
ஒளிவுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும்
அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனால் சொல்லத் திறமோ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
கதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ
சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்து என்னை ரட்சிக்க சாதகம் உனக்கில்லையோ
மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே!

மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே!
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து என்னை ஆள்வாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.
பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்துநான்பேரான ஸ்தலமும் அறியேன்!
பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன்!
வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன்!

மாதா பிதாவினது பாதாரவிந்தத்தை வணங்கி ஒருநாளும் அறியேன்!
சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன்!
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு நான் சாஷ்டாங்க தெண்டனிட்டு அறியேன்!
ஆமிந்தப் பூமியில் அடியனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியனாய் இருந்தனம்மா
பித்தலாட்டக்காரி என்று அறியாது உன்புருஷனை மறந்தேனம்மா
பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் நான் எப்படி விசனமில்லாமலே
பாங்குடன் இருப்பதம்மா!

இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது இது தருமம் அல்லவம்மா
எந்தனை ரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ இது நீதியல்லவம்மா!
அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை
மறந்தையோ அதை எனக்கு அருள்புரிவாய்!

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்திரக்காரி நீயே!
மாயாசொரூபி நீ மகேஸ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ

தயாநிதி விசாலாட்சியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ, சரவணனை ஈன்றவளும் நீ
பேய்களுடன் ஆடி நீ அத்தனிட பாகமதில்
பேறு பெற வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ

அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லதில்லையோ
பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ

இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதி அல்லவம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா
மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ
என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா
ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து
ரட்சித்து என் கவலை தீருமம்மா

சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா
சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ
அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன்
அடியேன் முன் வந்து நிற்பாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!
எந்தனைப் போலவே ஜனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடி யேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய்

நம்பினேன் உன் பாதம் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு
பின்னையென்று நீ சொல்லாமலே வறுமை போக்கடித்து என்னை ரட்சி
பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா!

அன்னையே இன்னமுன் அடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரட்சிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த
பாலருக்கு அருள் புரியவும்

சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர
வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா

பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னையே

All Comments (21)
  • @VARAGOORAN1
    காமாட்சி அம்மன் விருத்தம் கணபதி காப்பு மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட் புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும் கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே! சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிடுவாய்! சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றிவிடுவாய்! ஜெகமெலாம் உன் மாயை! புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்க சிறிய கடன் உன்னதம்மா சிவசிவ மஹேஸ்வரி பரமனிடை ஈஸ்வரி சிரோன்மணி மனோன்மணியும் நீ! அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீ அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகத் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒலியும் முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும் முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும் சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும் செங்கையில் பொன் கங்கணமும் ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும் அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! கதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும் கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே சற்றாகிலும் மனது வைத்து என்னை ரட்சிக்க சாதகம் உனக்கில்லையோ மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே! மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே! அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து என்னை ஆள்வாய்! அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்துநான்பேரான ஸ்தலமும் அறியேன்! பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன்! வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன்! மாதா பிதாவினது பாதாரவிந்தத்தை வணங்கி ஒருநாளும் அறியேன்! சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன்! சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு நான் சாஷ்டாங்க தெண்டனிட்டு அறியேன்! ஆமிந்தப் பூமியில் அடியனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ? அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியனாய் இருந்தனம்மா பித்தலாட்டக்காரி என்று அறியாது உன்புருஷனை மறந்தேனம்மா பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால் பாலன் நான் எப்படி விசனமில்லாமலே பாங்குடன் இருப்பதம்மா! இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது இது தருமம் அல்லவம்மா எந்தனை ரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ இது நீதியல்லவம்மா! அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ அதை எனக்கு அருள்புரிவாய்! அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ மணிமந்திரக்காரி நீயே! மாயாசொரூபி நீ மகேஸ்வரியுமான நீ மலையரசன் மகளான நீ தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ தயாநிதி விசாலாட்சியும் நீ தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ, சரவணனை ஈன்றவளும் நீ பேய்களுடன் ஆடி நீ அத்தனிட பாகமதில் பேறு பெற வளர்ந்தவளும் நீ ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ பிரிய உண்ணாமுலையும் நீ ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்டவல்லி நீயே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லதில்லையோ பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில் கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா இனி விடுவதில்லை சும்மா இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதி அல்லவம்மா அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து ரட்சித்து என் கவலை தீருமம்மா சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய் அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே! எந்தனைப் போலவே ஜனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடி யேன் தவிப்பதம்மா உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு பின்னையென்று நீ சொல்லாமலே வறுமை போக்கடித்து என்னை ரட்சி பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா! அன்னையே இன்னமுன் அடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரட்சிக்கவும் பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கு அருள் புரியவும் சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும் சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும் பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரட்சி ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னையே ஏகாம்பரி அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! எத்தனை ஜனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா இனியாகிலும் கிருபை வைத்து என்னை ரட்சியும் இனி ஜனனம் எடுத்திடாமல் முத்திர தர வேணும் என்றுன்னையே தொழுது நான்முக்காலும் நம்பினேனே முன்னும்பின்னும் தோணாத மனிதரைப் போல நீ விழித்திருக்காதேயம்மா வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் நான் சொன்ன விருத்தங்கள் பதினொன்றையும் விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் =செல்வத்தை விமலனார் ஏசப்போறார்அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும் குறையைத் தீருமம்மா அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!
  • @vijiravin
    This is sung by my school friend Bala who is no more. REcall the sweet shy down-to-earth softspoken soul that she was. One with double phds and running school for special children, pious and most caring, Bala will always live in our hearts. Everytime I hear her voice I picture her in my class in my next seat. Blessed to have been touched by this gentle soul in my life.
  • @user-is2si4lb7w
    மாங்கல்ய பாக்கியம் அருளும் அண்னையே போற்றி போற்றி
  • அம்மா தாயே காஞ்சி காமாட்சி எனக்கு இருந்த வலிகளை போக்கி என்னை வாழ வைத்தாய் தாயே உன் திருவடிகளே சரணம் அம்மா. ஒவ்வொரு முறையும் இப்பாடலை கேட்கும் போது கண்ணீர் வராமல் இருந்ததில்லை.தாயே சரணம் அம்மா.
  • காமாட்சி தாயே...நீயே கதி...உன்பாதமே கதி...பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை கொடு....
  • அன்னை காமாட்சி கருணையால்நான்கண்ட உண்மை மருத்துவர் களால் முடியாது என்ற செய்துள்ள காரியத்தை என்இல்லத்தார்களும்கண்டகாட்சிஅன்றுமுதல்எங்கள்குடும்பகுலதெய்வமாக அத்திவரதனுதங்கையானசிவசக்திசொருபமாக அன்னைகாமாட்சிவிளங்கிகொண்டிருக்கின்றார்.காமாட்சிதாயின் காலடியில் சரணடைந்தேன்.
  • எனக்கு 64 வயது என் தாயார் 7வயதிலிருந்து கற்றுத்தந்த ஒரே விடிவுகாலம் இதுதான் இசையுடன் கேட்கும் போது இன்னும் ஆனந்தம் 🙏
  • @indrar594
    என் வாழ்வில் இப்போது உயிருடன் இருக்கிறேன் என்றால் அது காமாட்சியின் கடாட்சம் அவளுக்கு அனந்தகோடி நமஸ்காரம்
  • பாடல் முடியம் போது தானாகவே கண்ணீர்! எவ்வளவு உருக்கமான குரல்! நன்றி! நன்றி!
  • @chandraraman5656
    காமாட்சி விருத்தம் கேட்கும் போது என் மனம் லேசாகவும் கண்களிலிருந்து கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது
  • @gdrgdr4177
    காஞ்சி காமாட்சி சரணம் மஹா பெரியவா சரணம் நன்றி,நன்றி,நன்றி
  • ஒவ்வொரு வெள்ளி கிழமையும் செவ்வாய் கிழமையும் கேட்கும்போது அழாமல் இருக்க முடியவில்லை ஆனந்தம் அற்ப்புதம்
  • @geethashiva1968
    கந்தசஷ்டி கவசம் போல் காமாட்சி அம்மன் விருத்தமும் ஒரு அரு மருந்து 🙏🙏🙏
  • எப்போது கேட்டாலும் கண்ணில் ஜலம் தான்
  • காலை காமாட்சி விருத்தம் கேட்பதை வழக்கமாக உள்ளேன்.தாயே அம்மா அனைவரேயும் காத்து அருள்.
  • @Rath2021
    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். காமாட்சி தாயே உன் பாதகமலங்களே சரணம் சரணம் 🙏🙏🙏
  • எனது குலதெய்வமே நீ தான் என்குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், தொழில் சிறக்கவேண்டும் தாயே!
  • எத்தனை முறை கேட்டாலும் பக்தி பரவசமாக்கும் பாடலும் குரலும்.இறையருளுடன் பல்லாண்டு காலம் வாழ்க.
  • @chithram1240
    திருமதி: பாலா - ஸ்வாமி & திருமதி- உமா சகோதரிகளின் பக்திபூர்வமான இந்த இசை எனக்கு கிடைத்த மகிழ்ச்சி. பொக்கிஷம்
  • @radhadevi9177
    என் மன எண்ணங்களை பிரத்யட்சமாக பிரதிபலிக்கும் உருக்கமான விருத்தம் இது,, அன்னையின் பெருமையை அளவிடவும் முடியுமோ!! இந்த ஏழைக்கும் அருள்வாய் காமாட்சி தாயே🙏🙏